


கே.ஜே.ஜேசுதாஸ் ....
அவசர யுகத்தில் தொலைந்து போன வாழ்க்கையை
தேடிக் கண்டு பிடித்துத் தரும்
தெய்வீகக் குரல்!
தீர்த்தக் கரைதனிலே....
மந்திரமாய் மனம் தடவும்
சந்தனத் தென்றல்!
- - -
இலையுதிர் காலத்திலும்
இளவேனிற் காலத்தை அனுபவிக்கலாம்.
ஒரு ஜேசுதாஸின் இசைத் தட்டை ஒலிக்க விடுங்கள்.
- - -
தூக்கம் வராத ராட்சத இரவுகளிலும்
சாமரங்கள் வாங்கிசந்தோஷமாகத் தூங்கலாம்....
ஒரு ஜேசுதாஸின் இசைத் தட்டைஒலிக்க விடுங்கள்!
- - -
ஏக்கங்களை எல்லாம்
தூக்கிப் போடலாம்...
ஒரு ஜேசுதாஸின் இசைத் தட்டை ஒலிக்க விடுங்கள்!
- - -காற்றின் அலைகள் எங்கும்....
பூக்கள்.... புதிது புதிதாக பூத்துக் குலுங்குவதை
பார்த்திருக்கின்றதா உங்கள் செவிகள்?
அப்படியானால்.....அப்போது...
ஜேசுதாஸின் பாடல் ஒன்று ஒலித்திருக்கக் கூடும்!
- - -
கஷ்டங்கள் அனைத்தும்
ஒரே மூட்டையாகக் கட்டப்பட்டு
இதயத்திலிருந்துஇறக்கி வைக்கப்பட்ட விந்தையை....
சந்தித்திருக்கிறதா உங்கள் வாழ்க்கை?
அப்படியானால்.....அப்போது ...
ஜேசுதாஸின் பாடல் ஒன்று ஒலித்திருக்கக் கூடும்!
நிஷ்டையில் இருந்த பின்பு கிடைக்கின்ற அமைதியை...
நிஷ்டையில் அமராமலேயே
நீங்களும் உனர்ந்தீர்களா?
அப்படியானால்.....அப்போது...
ஜேசுதாஸின் பாடல் ஒன்று ஒலித்திருக்கக் கூடும்!
- - -
ஜேசுதாஸ்...அவசர யுகத்தில் தொலைந்து போன வாழ்க்கையை
தேடிக் கண்டு பிடித்துத் தரும்
தெய்வீகக் குரல்!...
-யாழ் சுதாகர்
No comments:
Post a Comment